S. ILANGO.
Retired Banker. Has vast experience in Planning and Management. Held leadership positions in various NGOs including Jaycees & Rotary. Passionate in training students & corporate employees. Offers tailor-made training programmes to different groups of different needs.

Saturday 7 April 2012

(3) இளங்கோவின் குறும் புத்தகங்கள்


1. குழந்தைகளை நிர்வகித்தல்
MANAGING CHILDREN


குழந்தைகள் மருத்துவர் ச.ராமதாஸ் அவர்களின் அணிந்துரையிலிருந்து.....
--------------------------------------------------------------------------------------------------------


கணவனும் மனைவியும் வேலைக்குப் போகும் இந்தக்காலத்தில்  பிள்ளைகளிடத்தில் பேசுவதற்குக் கூட நேரம் கிடைப்பதில்லை.  கூட்டுக் குடும்பம் சிதைந்து போன இந்தக்காலத்தில் பாட்டியின் மடியில் படுத்துக் கதை கேட்கும் காலமும் கடந்து விட்டது.


இப்படியான எந்திர வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் பெற்றோர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் குழந்தைகளை நிர்வகிததல் என்ற குறும் புத்தகத்தை வெளியிட விழைந்த சமூக சிந்தனையாளர் எஸ் இளங்கோ அவர்களின் செயல் பாராட்டத்தக்கது...........


தங்களது குழந்தைகளை நல்ல அறிவாளியாக, பண்பாளனாக,
சமுதாயத்துக்குப் பயன்படக்கூடிய நல்ல மனிதனாக வளர்க்க ஆசைப்படும் அத்துனை பெற்றோர்களுக்கும் நண்பர் எஸ்.இளங்கோ அவர்களின் குழந்தைகளை நிர்வகித்தல் என்ற இந்தக் குறும் புத்தகம் பயனளிக்கும்...........


2. ஆக்கபூர்வ ஒத்துழைப்பு
CREATIVE CO-OPERATION




சிறந்த பயிற்சியாளர், JAYCEES இயக்கத்தின் முன்னாள் தேசியத் துணைத் தலைவர்  மறைந்த திரு P.S.A. கண்ணன் அவர்களின் அணிந்துரையிலிருந்து..........
----------------------------------------------------------------------------------------------------------


ஒத்துழைப்பு என்பது இந்த நூற்றாண்டில் மிகத் தேவையான ஒன்று.  அது ஆக்கபூர்வமானதாக இருக்குமானால் இன்னும் சற்று சாதனைகளை எட்டிப் பிடிக்க முடியும். .........




ஆக்கபூவமான ஒத்துழைப்பு என்ற புதிய படைப்பினை இளங்கோ அவர்கள் தன தனித் திறமையால் கொணர்ந்திருக்கிறார்கள்.  




வாழக்கை என்பது  பாதரச உருண்டையைப்போல வசீகரமானது.  அதே சமயம் யார் கையிலும் அகப்படாமல் நழுவிச் செல்வது.  அப்படி வாழ்க்கையை நழுவ விட்டுத் தேடுபவர்களுக்கு இக்குறும் புத்தகம் உதவிகரமாக இருக்கும்..............




3. போனில் பேசும் பண்பாடு
PHONE ETIQUETTE


முன்னாள் ரோட்டரி துணை ஆளுநர் Rtn. ஜெய் பார்த்திபன் அவர்களின் அணிந்துரையிலிருந்து............
------------------------------------------------------------------------------------------------------




பேசும் போது கவனத்தோடு பேச வேண்டும்.  அதுவும் போனில் பேசும்போது கவனத்தோடும் கூடவே அதற்கே உரிய பண்பாட்டோடும் பேச வேண்டும். ....




பொருத்தமான கேலிச் சித்திரங்களோடு மென்மையாகவும், அதே நேரத்தில் அழுத்தமாகவும் போனில் பேசும் பண்பாட்டை அவர் இப்புத்தகத்தில் விவரித்திருப்பது அட.... இதை நாம் கடைப்பிடிக்க வேண்டுமே என்ற அவாவை நமக்குள் எழுப்புகிறது........




எஸ். இளங்கோ சிறந்த மனித வள மேம்பாட்டு ஆலோசகர், கருத்தாளர், பயிற்சியாளர்..... இப்புத்தகத்தை பயிற்சியாளர்கள் பயன்படுத்த தக்க ஒரு பயிற்சிக் கையேடாகவும் எல்லோரும் படித்து அதன்வழி நடக்கிற ஒரு வழிகாட்டிக் கையேடோகவும் அவர் வடித்துத் தந்திருக்கிறார்.....


4. திருக்குறள் வழியில் சிறந்த நிர்வாகி
EFFECTIVE EXECUTIVE-THIRUKKURAL WAY


JAYCEES இயக்கத்தின் முன்னாள் தேசிய தலைவர் Jci Sen M. ராஜன்பாபு அவர்களின் அணிந்துரையிலிருந்து......
------------------------------------------------------------------------------------------------------


............ஒரு பொக்கிசமாக பாதுகாத்து வைக்க வேண்டிய குறும் புத்தகம் இது. படிக்கும் அனைவரையும் கவர்ந்து, உற்சாகப்படுத்தி, அவர்கள் துறையில் மேம்படச் செய்யும்..........


5. இண்டர்வீயுக்குப் போகும் இளைஞனுக்கு
INTERVIEWKKUP POKUM ILAIGNANUKKU




புதுக்கோட்டை இலக்கியப் பேரவைத் தலைவர் திரு முத்துசீனிவாசன் அவர்களின் அணிந்துரையிலிருந்து........
------------------------------------------------------------------------------------------------------




இன்றைய உலகம் போட்டிகள் நிறைந்தது.  திறமைகளும், தெளிவான சிந்தனைகளுமே ஒருவரை முன்னேற்றமடையச் செய்யும்.........
எனவே புதிய கண்ணோட்டங்களும், கருத்தோட்டங்களும் வேலை தேடும்  இளைஞர்களுக்கு அவசியம்.  எனவே தன்விபரக் குறிப்புகளைத் தயாரிக்கவும் நேர்காணலை அணுகவும் சரியான வழிகாட்டி முறைகள் தேவை.


அந்த அரிய, அவசியப் பணியை எஸ். இளங்கோ இண்டர்வீயுக்குப் போகும் இளைஞனுக்கு என்ற குறு நூலைப் படைத்திருப்பதன் மூலம் மிகவும் நேர்த்தியாகப் பூர்த்தி செய்துள்ளார்..........




இக்குறுநூல் இளைஞர் சமுதாயத்திற்கு காலத்தே செய்த உதவியாகும்......


6. திருக்குறள் வழியில் சுய மேன்மை
SELF EXCELLENCE-THIRUKKURAL WAY


JAYCEES PAST ZONE PRESIDENT D.செல்வம் அவர்களின் அணிந்துரையிலிருந்து.....
-----------------------------------------------------------------------------------------------------------


வள்ளுவத்தில் இன்றைய காலத்திற்கு ஏற்ற சுய முன்னேற்றம், சுய மற்றும் வணிக மேலாண்மைக்குப் பொருந்துகிற கருத்துக்கள் இருக்கிறதா எனப் பலரும் ஆர்வத்தோடு திருக்குறளை ஆராய்ந்து வருகிறார்கள்.  அப்படி ஒரு தனித்துவ மிக்க முயற்சியை எஸ்.இளங்கோ அவர்களும் மேற்கொண்டிருக்கிறார்கள்.




ஈராயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குறள்களுக்கு நவீன காலத்திற்கேற்ற புதிய அர்த்தங்களை அவர் அற்புதமாக அளித்திருப்பது நம்மை வியக்க
வைக்கிறது.  ஆர்வத்தோடு படிக்கத் தூண்டுகிறது.  அதிலும் குறிப்பாக முன்னேறத் துடிக்கிற இளைய தலைமுறையின் மனதை முறுக்கேற்றுகிற விதத்தில் அவர் எழுதி இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.......


7. விரும்பப்படுபவரே வெற்றியாளர்
LIKABILITY AND SUCCESS






மதுரை தியாகராஜர் கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் மற்றும் JAYCEES இயக்கத்தின் முன்னாள் தேசிய தலைவர் ராஜா கோவிந்தசாமி அவர்களின் அணிந்துரையிலிருந்து....
----------------------------------------------------------------------------------------------------------


எஸ்.இளங்கோ அவர்களின் விரும்பப்படுபவரே வெற்றியாளர் எனும் கையேடு சுருக்கமாகவும், தெளிவாகவும் வெளி வந்துள்ளது.




மக்களால் விரும்பப்படுபவராகத் திகழ்ந்த, திகழ்கின்ற தலைவர்கள், வெற்றியாளர்கள் ஆகியோரின் அணுகுமுறைகளை நாமும் பின்பற்றும் வகையில் 10 அம்சத் திட்டமாக இளங்கோ வெளியிட்டிருக்கிறார்.






































No comments:

Post a Comment